மேலும் செய்திகள்
'யூரோ' கால்பந்து: பைனலில் இங்கிலாந்து
23-Jul-2025
அரையிறுதியில் செல்சி: கிளப் உலக கால்பந்தில்
05-Jul-2025
அதிரடி Half century Rishabh pant அசத்தல்
25-Jul-2025
ஸ்பெயின் 'சாம்பியன்'பெல்கிரேடு: செர்பியாவில் நடந்த 'யூரோ' கோப்பை (18 வயது) கூடைப்பந்து பைனலில் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி 82-81 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.அர்ஜென்டினா அசத்தல்மான்டிவீடியோ: உருகுவேயில் நடந்த பெண்களுக்கான பான் அமெரிக்கன் கோப்பை ஹாக்கி பைனலில் அர்ஜென்டினா, அமெரிக்கா அணிகள் மோதின. அசத்தலாக ஆடிய அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 7வது முறையாக சாம்பியன் ஆனது.இத்தாலி கலக்கல்யெரெவன்: ஆர்மெனியாவில் ஆண்களுக்கான (17 வயது) ஐரோப்பிய வாலிபால் சாம்பியன்ஷிப் பைனலில் இத்தாலி, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இத்தாலி அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது முறையாக (2017, 2023, 2025) கோப்பை வென்றது.பெல்ஜியம் வெற்றிமாடோசின்ஹோஸ்: போர்ச்சுகலில் நடக்கும் பெண்களுக்கான (20 வயது) 'யூரோ' கூடைப்பந்து லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 104-80 என்ற கணக்கில் இஸ்ரேலை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அணி 89-48 என லிதுவேனியாவை வென்றது.எக்ஸ்டிராஸ்* மணிப்பூரில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ரியல் காஷ்மீர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் 'டிடிம் ரோடு அத்லெடிக் யூனியன்' (டி.ஆர்.ஏ.யூ.,) எப்.சி., அணியை வீழ்த்தியது.* கஜகஸ்தானில், வரும் ஆக. 16-30ல் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கவுள்ளது. இதற்கு தயாராக, இந்திய நட்சத்திரங்களுக்கான பயிற்சி முகாம் நேற்று டில்லியில் துவங்கியது.* லக்னோவில் நடந்த தகுதிப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் அமன் ஷெராவத், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (செப். 13-21, குரோஷியா) போட்டிக்கான இடத்தை உறுதி செய்தார்.* ஆஸ்திரேலிய தொடருக்கான (ஆக. 15-19, பெர்த்) இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நியமனம். இளம் தற்காப்பு வீரர் பூவண்ணா, மன்பிரீத் சிங், மன்தீப் சிங், செல்வம் கார்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.* அமெரிக்காவில் நடந்த யு.எஸ்., கிட்ஸ் உலக கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் (9 வயது) பெங்களூருவை சேர்ந்த இளம் வீராங்கனை வேதிகா பன்சாலி சாம்பியன் பட்டம் வென்றார்.* வில்வித்தை லீக் முதல் சீசன், வரும் அக்டோபர் மாதம் நடத்தப்படும் என இந்திய வில்வித்தை சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்க உள்ளன.* பெங்களூருவில் நடக்கும் ஜூனியர் தேசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப், நீச்சல் போட்டிக்கான 200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் மணிப்பூர் வீரர் கொய்ஜாம் அதோய்பா சிங் (2:09.63), கோவா வீராங்கனை பூர்வி (2:18.35) தங்கம் வென்றனர்.
23-Jul-2025
05-Jul-2025
25-Jul-2025