உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

அரையிறுதியில் இத்தாலிபோலோக்னா: இத்தாலியில், டேவிஸ் கோப்பை பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஆஸ்திரியா, இத்தாலி அணிகள் மோதின. இதில் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதியில் இத்தாலி, பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.ரியல் மாட்ரிட் தோல்விலண்டன்: இங்கிலாந்தில் நடந்த பெண்கள் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஆர்சனல், ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 1-2 என தோல்வியடைந்தது. பிரான்சில் நடந்த போட்டியில் பாரிஸ் அணி 2-0 என, பென்பிகா அணியை (போர்ச்சுகல்) தோற்கடித்தது.பிரேசில் முன்னேற்றம்அசன்சியன்: பராகுவேயில், தெற்கு, மத்திய அமெரிக்க பெண்களுக்கான 'யூத்' ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பிரேசில் அணி 47-16 என, பெருவை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த பிரேசில் 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் பராகுவேயை சந்திக்கிறது.எக்ஸ்டிராஸ்* சையது முஷ்தாக் அலி டிராபி ('டி-20') தொடருக்கான (நவ. 26 - டிச. 18) கர்நாடகா அணியில் தேவ்தத் படிக்கல், கருண் நாயர் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.* 'பிபா' உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 136வது இடத்தில் இருந்து 142வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை (2027) தகுதிச் சுற்றில் இந்திய அணி 0-1 என தோல்வியடைந்தது.* சீனாவில் நடந்த பெண்களுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 0-2 என, சீனாவின் உகான் ஜியாங்டா அணியிடம் தோல்வியடைந்தது.* ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கும் ஸ்னுாக்கர் உலக கோப்பை லீக் போட்டியில், பங்கஜ் அத்வானி, ஆதித்யா மேத்தா அடங்கிய இந்தியா 'பி' அணி 3-0 என்ற கணக்கில் ஓமனை வீழ்த்தியது.* இந்துாரில் நடக்கும் இந்திய ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங் 3-0 (11-5, 11-1, 11-4) என ஜெர்மனியின் கேத்ரினா டைகோவாவை வீழ்த்தினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 3-0 (11-4, 11-6, 11-3) என ஸ்பெயினின் சோபியா மேடியோசை வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ