உலக விளையாட்டு செய்திகள்
வீனஸ் வில்லியம்ஸ் திருமணம்புளோரிடா: அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 45. கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் 7 பட்டம் வென்றுள்ள இவர், இத்தாலி நடிகர் ஆன்ட்ரியா பிரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண கொண்டாட்ட நிகழ்ச்சி, புளோரிடாவில் உள்ள பால்ம் கடற்கரையில் நடந்தது.அரையிறுதியில் ஆர்சனல்லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் இங்கிலிஷ் லீக் கோப்பை கால்பந்து தொடருக்கான காலிறுதியில் ஆர்சனல், கிறிஸ்டல் பேலஸ் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய ஆர்சனல் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதியில் ஆர்சனல், செல்சி அணிகள் மோதுகின்றன.எக்ஸ்டிராஸ்* கத்தார் தலைநகர் தோகாவில், உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ், 'நடப்பு சாம்பியன்' கொனேரு ஹம்பி, பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ காருணா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.* கபடி சாம்பியன்ஸ் லீக் (கே.சி.எல்.,) முதல் சீசனுக்கான ரோதக் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சுரேந்தர் நாடா நியமனம்.* கவுகாத்தி டெஸ்டில் இந்தியா, தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது. அப்போது, தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட்,' இந்திய வீரர்கள் அதிக நேரம் பீல்டிங் செய்ய வேண்டும் என்பதற்கு 'தரையில் ஊர்ந்து செல்வது' என்ற அர்த்தம் கொண்ட வார்த்தையை பயன்படுத்தினார். இது சர்ச்சை கிளப்பியது. இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணி கேப்டன் பவுமா கூறுகையில்,'' வழக்கமாக நிதானமாக பேசும் கான்ராட், வேறு வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம்,'' என்றார்.