உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக மல்யுத்தம்: அபிஷேக் வெண்கலம்

உலக மல்யுத்தம்: அபிஷேக் வெண்கலம்

திரானா: உலக மல்யுத்தத்தில் (23 வயது) இந்தியாவின் அபிஷேக் வெண்கலப் பதக்கம் வென்றார்.அல்பேனியாவில், 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அபிஷேக் தாகா, உக்ரைனின் மைகிதா அப்ரமோவ் மோதினர். அபாரமாக ஆடிய அபிஷேக் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் அபிஷேக் கைப்பற்றிய 2வது பதக்கம். இதற்கு முன், 2022ல் பல்கேரியாவில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் தொடரின் 57 கிலோ பிரிவில் அபிஷேக் வெண்கலம் வென்றிருந்தார்.ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிராக் 8-0 என, கஜகஸ்தானின் ஆலன் ஓரல்பெக்கை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தார்.மற்ற எடைப்பிரிவில் இந்தியாவின் அனிருத் குமார் (125 கிலோ), தீபக் நெஹ்ரா (86 கிலோ) ஏமாற்றினர். இத்தொடரில் இந்தியாவுக்கு இதுவரை ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என, மொத்தம் 6 பதக்கம் கிடைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை