மேலும் செய்திகள்
பூஜா தேசிய சாதனை: ஜூனியர் தடகள பைனலுக்கு தகுதி
30-Aug-2024
லிமா: பெருவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 10,000 மீ., நடை போட்டி நடந்தது. இந்தியா சார்பில் 17 வயது வீராங்கனை ஆர்த்தி பங்கேற்றார். இவர், 44 நிமிடம், 39.39 வினாடி நேரத்தில் வந்து வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றார். இது, இத்தொடரில் இந்தியா வென்ற முதல் பதக்கம்.ஆண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டம் நடந்தது. இந்தியாவின் ரிஹான் சவுத்ரி, அன்குல், அபிராம் பிரமோத், ஜெய் குமார் இடம் பெற்ற அணி, 3 நிமிடம், 08.10 வினாடி நேரத்தில் வந்தது. ஒட்டுமொத்தமாக 3வது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது. பெண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சந்திரமோல், கனிஷ்டா, நீரு பதக், ஷ்ரவானி கூட்டணி, (3 நிமிடம், 40.43 வினாடி) 9வது இடம் பிடிக்க, பைனல் ('டாப்-8' மட்டும்) வாய்ப்பை இழந்தது. பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்திலும், ருஜுலா, நியோல் அனா, அபிநயா, சுதீக்சா இடம் பெற்ற இந்திய அணி (45.31 வினாடி) 9வது இடம் பெற, பைனல் வாய்ப்பு நழுவியது.
30-Aug-2024