மேலும் செய்திகள்
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி
08-Sep-2025
புதுடில்லி: உலக பாரா தடகளத்தில் இந்தியா நேற்று 2 வெள்ளி, 1 வெண்கலம் என மூன்று பதக்கம் வென்றது.டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான கிளப் த்ரோ (எப் 51) பைனல் நடந்தது. இந்தியாவின் ஏக்தா பயான், 19.80 மீ., துாரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இந்த சீசனில் இவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது. மற்றொரு வீராங்கனை காஷிஷ் (11.64), கடைசி இடம் (6) பிடித்தார்.ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி 64 பிரிவு போட்டி நடந்தது. இந்தியாவின் பிரவீன் குமார், அதிகபட்சம் 2.00 மீ., உயரத்தை இரண்டாவது வாய்ப்பில் தாண்டியதால், வெண்கலப்பதக்கம் வென்றார்.ஆண்களுக்கான குண்டு எறிதல் எப் 57 பிரிவில் பைனல் நடந்தது. இந்தியாவின் சோமன் ராணா, 14.69 மீ., துாரம் எறிந்து, இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி வசப்படுத்தினார்.அரையிறுதியில் சிம்ரன்பெண்களுக்கான 200 மீ., ஓட்டம் (டி 12) தகுதிச்சுற்றில் இந்தியாவின் சிம்ரன், 25.03 வினாடி நேரத்தில் கடந்து, அரையிறுதிக்கு முன்னேறினார். பெண்கள் நீளம் தாண்டுதல் (டி 47) நடந்தது. இந்தியாவின் நிமிஷா, 5.74 மீ., தாண்டி, 4வது இடம் பெற, வெண்கலப் பதக்கம் நழுவியது.மொத்தம் '18'இதுவரை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் பிரேசில் (12 தங்கம், 19 வெள்ளி, 7 வெண்கலம், மொத்தம் 38), சீனா (9+18+14=41), போலந்து (8+2+5=15) அணிகள் உள்ளன
08-Sep-2025