உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வெண்கலம் வென்றார் மான்சி *உலக மல்யுத்தத்தில் அபாரம்

வெண்கலம் வென்றார் மான்சி *உலக மல்யுத்தத்தில் அபாரம்

திரானா: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் மான்சி.அல்பேனியாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 59 கிலோ பிரிவில் இந்தியாவின் மான்சி பங்கேற்றார். அரையிறுதியில் மான்சி, 1--4 என மங்கோலியாவின் சுக்கீயிடம் தோல்வியடைந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான 'ரெப்பிசாஜ்' போட்டியில் மான்சி, பான் அமெரிக்க தொடரில் 3 முறை தங்கம் வென்ற, கனடாவின் லாரன்சை எதிர்கொண்டார். இதில் மான்சி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதையடுத்து உலக சாம்பியன்ஷிப்பின் பல்வேறு தொடரிலும் பதக்கம் வென்று சாதித்தார் மான்சி. முன்னதாக 2016ல் 17 வயதுக்கு உட்பட்ட தொடரில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய மான்சி, 2018ல் 20 வயது பிரிவு, 2023ல் 22 வயது பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். தற்போது சீனியர் அரங்கிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை