உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / டேவிஸ் கோப்பை: பாலாஜி, ராம்குமார் ஏமா்றறம்

டேவிஸ் கோப்பை: பாலாஜி, ராம்குமார் ஏமா்றறம்

ஸ்டாக்ஹோம்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தனர்.சுவீடனில் நேற்று துவங்கிய டேவிஸ் கோப்பை டென்னிஸ், 'வேர்ல்டு குரூப்--1' போட்டியில் இந்தியா, சுவீடன் அணிகள் விளையாடுகின்றன. இதன் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, சுவீடனின் எலியாஸ் யெமர் மோதினர். முதல் செட்டை 4-6 என இழந்த ஸ்ரீராம் பாலாஜி, இரண்டாவது செட்டை 2-6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் ஸ்ரீராம் பாலாஜி 4-6, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுவீடனின் லியோ போர்க் மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த ராமநாதன், இரண்டாவது செட்டை 4-6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் ராம்குமார் ராமநாதன் 3-6, 4-6 என தோல்வியடைந்தார். இந்திய அணி 0-2 என பின்தங்கி உள்ளது.இரட்டையர், மாற்று ஒற்றையர் போட்டிகள் (செப்டம்பர் 15) நடக்கின்றன. இரட்டையரில் ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, சுவீடனின் பிலிப் பெர்கேவி, ஆன்ட்ரி கோரன்சன் ஜோடியை சந்திக்கிறது. மாற்று ஒற்றையரில் ராம்குமார்-எலியாஸ் யெமர், ஸ்ரீராம் பாலாஜி-லியோ போர்க் மோதுகின்றனர். இம்மூன்று போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை