மேலும் செய்திகள்
போபண்ணா 'நம்பர்-1' * இந்திய வீரர்களில் அபாரம்
06-May-2025
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் இத்தாலியின் சின்னர், ரஷ்யாவின் ஆன்ட்ரீவா வெற்றி பெற்றனர். பிரான்சின் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர், இத்தாலின் சின்னர், பிரான்சின் ரிண்டெர்நெக்கை ('நம்பர்-75) சந்தித்தார். 2 மணி நேரம், 17 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சின்னர், 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். ஜெர்மனியின் ஜிவரேவ், 6-3, 6-3, 6-4 என அமெரிக்காவின் டியனை வீழ்த்தினார். உலகின் 'நம்பர்-6' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் மெக்கன்சி ('நம்பர்-98') மோதினர். இதில் ஜோகோவிச் 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்ற போட்டிகளில் ரிச்சர்டு காஸ்குயட் (பிரான்ஸ்), ஷபோவலோவ் (கனடா), ஷெவ்சென்கோ (ரஷ்யா) வெற்றி பெற்றனர். ஆன்ட்ரீவா வெற்றிபெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் 'நம்பர்-6' வீராங்கனை ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்சாவை சந்தித்தார். இதில் ஆன்ட்ரீவா, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். பெலாரசின் அசரன்கா, 6-0, 6-0 என பெல்ஜியத்தின் விக்மேயரை எளிதாக சாய்த்தார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஹிபினோ (ஜப்பான்), வன்ரோசோவா (செக் குடியரசு), சபைன் கெனின், கோகோ காப் (அமெரிக்கா), கலினினா (உக்ரைன்) வெற்றி பெற்றனர்.
06-May-2025