உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: வாலண்டைன் சாம்பியன்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: வாலண்டைன் சாம்பியன்

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையரில் மொனாக்கோ வீரர் வாலண்டைன் சாம்பியன் பட்டம் வென்றார்.சீனாவில், ஆண்களுக்கான ஷாங்காய் 'மாஸ்டர்ஸ் 1000' டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-204' மொனாக்கோவின் வாலண்டைன் வச்செரோட் 26, ஏ.டி.பி., தரவரிசையில் 54வது இடத்தில் உள்ள பிரான்சின் ஆர்தர் ரின்டெர்க்னெக் 30, மோதினர். இருவரும் உறவினர்கள்.முதல் செட்டை 4-6 என இழந்த வாலண்டைன், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 6-3 என வென்றார்.இரண்டு மணி நேரம், 14 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய வாலண்டைன் 4-6, 6-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக கோப்பை வென்றார். இதன்மூலம் ஏ.டி.பி., 'மாஸ்டர்ஸ் 1000' டென்னிஸ் வரலாற்றில், தரவரிசையில் பின்தங்கிய வீரர் முதன்முறையாக சாம்பியன் ஆனார். தவிர, 'மாஸ்டர்ஸ் 1000' பட்டம் வென்ற முதல் மொனாக்கோ வீரரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ