மேலும் செய்திகள்
ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி
13-Feb-2025
தோகா: கத்தார் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு போபண்ணா ஜோடி முன்னேறியது.கத்தாரில் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, போர்ச்சுகலின் போர்கஸ் ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற இத்தாலியின் போலெல்லி, வவாசோரி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை போபண்ணா ஜோடி 7-6 என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த செட்டையும் 7-6 என போராடி வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 37 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 7-6, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
13-Feb-2025