உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / பைனலில் சுமித் நாகல்

பைனலில் சுமித் நாகல்

ஹெய்ல்புரோன்: சாலஞ்சர் டென்னிஸ் தொடர் பைனலுக்கு இந்தியாவின் சுமித் நாகல் முன்னேறினார். ஜெர்மனியில் ஆண்களுக்கான சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் 'நம்பர்-95' வீரர், இந்தியாவின் சுமித் நாகல், 103 வது இடத்திலுள்ள பிரான்சின் லுகா வான் மோதினர். முதல் செட்டை சுமித் நாகல் 6-2 என கைப்பற்றினார். இரண்டாவது செட் இழுபறியாக அமைய, 'டை பிரேக்கருக்கு' சென்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட சுமித் நாகல் 7-6 என வசப்படுத்தினார். 2 மணி நேரம், 1 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை