யு.எஸ்.,ஓபன்: காலிறுதியில் ஸ்வியாடெக்
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு போலந்தின் ஸ்வியாடெக் முன்னேறினார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, போலந்தின் இகா ஸ்வியாடெக், 'நம்பர்-16' இடத்திலுள்ள ரஷ்யாவின் சம்சனோவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-4 என வசப்படுத்திய ஸ்வியாடெக், அடுத்த செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார்.ஒரு மணி நேரம், 31 நிமிடம் நடந்த போட்டியில் ஸ்வியாடெக் (6-4, 6-1) வெற்றி பெற்று, இத்தொடரில் இரண்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு நான்காவது சுற்றில் டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, பிரேசிலின் ஹதாத் மையாவுடன் மோதினார். இதில் வோஸ்னியாக்கி 2-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.சின்னர் அபாரம்ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர் இத்தாலியின் ஜானிக் சின்னர், 'நம்பர் 14' வீரர், அமெரிக்காவின் டாமி பால் மோதினர். இதில் முதல் இரு செட்டுகளை 'டை பிரேக்கர்' சென்று, 7-6, 7-6 என போராடி வசப்படுத்தினார் சின்னர். அடுத்த செட்டில் 6-1 என எளிதாக வென்றார். முடிவில் சின்னர் 7-6, 7-6, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.அரையிறுதியில் போபண்ணா ஜோடிகலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா, இந்தோனேஷியாவின் அல்டிலா ஜோடி, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென், செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா ஜோடியை சந்தித்தது. இதில் போபண்ணா ஜோடி 7-6, 2-6, 10-7 என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.