உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / வள்ளலார் கல்வி நிலையத்தில் இலக்கிய விழா: சீருடை வழங்கல்

வள்ளலார் கல்வி நிலையத்தில் இலக்கிய விழா: சீருடை வழங்கல்

அரியலூர்: அரியலூர் அருகேயுள்ள லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் இலக்கிய மன்ற விழா நடந்தது.அரியலூர் அருகே உள்ள லிங்கத்தடிமேடு சித்தசக்தி அருட்ஜோதி வள்ளலார் கல்வி நிலையத்தில் நடந்த இலக்கிய மன்ற ஆண்டு விழாவுக்கு, கீழப்பழுவூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் துணை பொதுமேலாளர் கணேசன் தலைமை வகித்தார். வள்ளலார் கல்வி நிலைய தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கல்வி நிலைய செயலாளர் புகழேந்தி வரவேற்றார்.வள்ளலார் கல்வி நிலையத்தில் தங்கி கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் 275 பேருக்கும், பழுதூர் நாராயணசாமி சார்பிலான சீருடைகளை, தமிழ்வேதம் ஆசிரியர் பக்தவசலம் வழங்கி, சைவ திருமுறைகளில் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் பேசினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நோட்டு, புத்தகங்களை, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-மங்களம் தம்பதியினர் வழங்கினார்கள். கருவேப்பிலங்குறிச்சி சண்முகசுந்தரம் மாணவர்களுக்கு தமிழ்வேதம் நூல்கள் வழங்கினார். கணக்கு கருவிகளை தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி