ஆசிரியர் பாலியல் தொல்லை பள்ளிக்கு பெற்றோர் பூட்டு
தளவாய்: மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, பள்ளியை இழுத்து பூட்டி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரியலுார் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, அப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக நியமனம் செய்த தற்காலிக ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து, மாணவியர் தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.அரியலுார் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஹொசர், பெற்றோரிடம் பேச்சு நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.தளவாய் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான ஆசிரியரை தேடி வருகின்றனர்.