துாங்கிய பெண்ணிடம் 10 சவரன் செயின் பறிப்பு
பெருங்களத்துார்:சேலையூர் அடுத்த வெங்கம்பாக்கம், ஜெயராம் நகர் பிரதான சாலையில் வசிப்பவர் சிவசங்கர், 32; கட்டட ஒப்பந்ததாரர். அவரது மனைவி தேவி துர்கா. இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் உறங்கி கொண்டிருந்தனர்.நேற்று அதிகாலை 3:45 மணிக்கு பின்பக்க மரக்கதவை உடைத்து, உள்ளே நுழைந்த இரு மர்ம நபர்கள், ஹாலில் இருந்த 100 கிராம் வெள்ளி பொருட்களை திருடினர்.விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்காததால் அதிருப்தியில், ஒரு அறையில் துாங்கிக் கொண்டிருந்த தேவி துர்காவின் கழுத்தின் கிடந்த 10 சவரன் செயினை பறித்தனர்.அவரது அலறலை கேட்டு, சிவசங்கர் வருவதற்குள், மர்ம நபர்கள் நகைகளுடன் தப்பி ஓடினர். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.