உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வடபழனியில் பாலியல் தொழில் பெண் உட்பட 2 பேர் கைது

வடபழனியில் பாலியல் தொழில் பெண் உட்பட 2 பேர் கைது

சென்னை: வடபழனி வடக்கு மாடவீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக, மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, பெண் போலீசார், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பஷிர் அகமது இப்ராஹிம், 61, தி.நகரைச் சேர்ந்த தேவி, 40, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் பிடியில் இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார். பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை