உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 50 கிலோ உயர்ரக போதை பொருட்கள் 2024ல் சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்

50 கிலோ உயர்ரக போதை பொருட்கள் 2024ல் சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு, கடந்த ஆண்டில் கடத்தி வரப்பட்ட, உயர்ரக கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் போன்ற, 50.50 கிலோ, 'சின்தடிக்' போதை பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு போதை பொருட்கள் கடத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணியர் போல் செல்லும் பலர், வெளிநாடுகளில் உள்ள போதைக் கும்பலுடன் சிண்டிகேட் வைத்து, போதைப் பொருட்களை கடத்திவருகின்றனர்.கடந்த 2023ம் ஆண்டு முழுதும், சென்னை விமான நிலையத்தில் வெறும், 15.3 கிலோ உயர் ரக போதை பொருட்கள் சிக்கின. ஆனால் கடந்தாண்டு, உயர்ரக கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன், கனாபினாய்ட்ஸ், கோகைன் போன்ற, 50.50 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதிகபட்சமாக, டிசம்பரில், 21.47 கிலோ, பிப்ரவரியில், 17.13 கிலோ, நவம்பரில், 3.30 கிலோ, ஜூனில், 2.38 கிலோ, ஜூலையில், 2.53 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தாய்லாந்து, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து, அதிக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை