குறைதீர்வு கூட்டத்தில் 56 பேருக்கு பட்டா
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடந்தது. அதில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலைந்துரையாடி, பொதுமக்களிடம் நேற்று, கோரிக்கை மனுக்கள் பெற்றார்.இதில், வீட்டுமனை, மின் இணைப்பு, டாஸ்மாக் கடை மாற்றம், வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 477 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டார்.அதன்பின், மதுராந்தகம் தாலுகாவில், 56 பேருக்கு வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், 60 பயனாளிகளுக்கு 68.80 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.