உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நான் முதல்வன் திட்டத்தில் 86,025 மாணவர்கள் பயன்

நான் முதல்வன் திட்டத்தில் 86,025 மாணவர்கள் பயன்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், நான் முதல்வன் திட்டத்தில், 86,025 மாணவர்கள் திறன் பயிற்சி பெற்று பயனடைந்தனர்.இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழகத்தின் மாணவ - மாணவியரின் தனித்திறமைகளை அடையாளம் காண்பதற்காக, நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இவர்களை ஊக்குவிக்கும் வகையில், கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், 2022- - 23, 2023 - -24ம் கல்வி ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லுாரி, கலை மற்றும் அறிவியல், ஐ.டி.ஐ., டிப்ளமா என, மொத்தம் 68,025 மாணவர்கள் பயன்பெற்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ