உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய மின்மாற்றி அமைக்க அத்திவாக்கத்தில் கோரிக்கை

புதிய மின்மாற்றி அமைக்க அத்திவாக்கத்தில் கோரிக்கை

செங்கல்பட்டு,:மதுராந்தகம் அடுத்த அத்திவாக்கம் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் மாற்றி செயல்பாட்டில் உள்ளது.இந்த மின் மாற்றியில் இருந்து, மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி, தெரு விளக்கு, வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் விவசாய மின் மோட்டார்களுக்கு, மின் வினியோகம் செய்யப்படுகிறது.தற்போது, குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால், விவசாய மின் மோட்டர்கள் அடிக்கடி பழுது ஏற்படுகின்றன. தெரு விளக்குகளும் பிரகாசமாக எரியாததால், தெருக்களில் அச்சத்துடன் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.இதனால், புதிய மின்மாற்றி அமைத்து, சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என, கலெக்டரிடம், கிராம மக்கள் மனு அளித்தனர். இம்மனு மீது நடவடிக்கை எடுக்க, மின்வாரிய அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை