உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் கிணறு சுவரை உயர்த்தி மேல்முடி அமைக்க கோரிக்கை

குடிநீர் கிணறு சுவரை உயர்த்தி மேல்முடி அமைக்க கோரிக்கை

திருப்போரூர், : திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் பெரிய ஏரியில், மூன்று குடிநீர் கிணறு உள்ளது. இதில், இரண்டு கிணறுகள், ஏரியின் மத்தியில் நீர் தேங்கும் பகுதியில் அமைந்துள்ளன. இவற்றின் வாயிலாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மழைகாலத்தில் ஏரி நீர் மட்டம் அதிகரிக்கும் போது, கிணற்றுக்குள் நீர் செல்கிறது. இதனால், கிணற்று நீர் மாசடைவதாக மக்கள் கருதுகின்றனர்.அதனால், மழைகாலத்தில் இந்த ஏரி கிணற்றிலிருந்து வரும் தண்ணீரை குடிப்பதற்கு அப்பகுதிவாசிகள் அச்சப்படுகின்றனர்.எனவே, ஏரியின் மத்தியில் உள்ள இரண்டு குடிநீர் கிணறுகளின் மேல்புற பக்கவாட்டு சுற்றுச்சுவரை, 2 அடி வரை உயர்த்தி, அதற்கு கான்கிரீட் மேல்முடி அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை