உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேம்பாலத்தில் வளரும் மரம் உறுதித்தன்மைக்கு ஆபத்து

மேம்பாலத்தில் வளரும் மரம் உறுதித்தன்மைக்கு ஆபத்து

செங்கல்பட்டு:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும்.இந்த சாலையில், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் சந்திப்பில் மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் இருபுறமும், மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன.இதன் காரணமாக, பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், இந்த பகுதியில், சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.எனவே, இந்த மேம்பாலத்தில் உள்ள அரச மரக்கன்றுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை