மேலும் செய்திகள்
ஏர்போர்ட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
05-Feb-2025
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து, அ.தி.மு.க.,வினர் அமைத்திருந்த கொடிகம்பத்தை, அதிகாரிகள் நேற்று அகற்றினர்.செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில், பொன்விளைந்தகளத்துார் சாலை சந்திப்பில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, அ.தி.மு.க.,வினர் பெரிய கொடி கம்பம் மற்றும் கல்வெட்டு அமைத்திருந்தனர்.இதை சில ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதன் அருகில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து, கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை, போலீசார் இணைந்து, சாலை சந்திப்பில் இருந்த அ.தி.மு.க., கொடி கம்பம் மற்றும் கல்வெட்டை, 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, நேற்று அதிகாலை அப்புறப்படுத்தினர்.இந்த இடத்தில், ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவம், அ.தி.மு.க.,வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோன்று, பொதுமக்களுக்கு இடையூறாக, பல இடங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்களையும் பாரபட்சமின்றி அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
05-Feb-2025