மேலும் செய்திகள்
முடிச்சூரில் கோவில் உண்டியல்கள் திருட்டு
2 hour(s) ago
மாரடைப்பால் சிறை கைதி மரணம்
2 hour(s) ago
டிவிஷன் கால்பந்து வரும் 9ல் துவக்கம்
2 hour(s) ago
செங்கல்பட்டு,:பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில், பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற, மீன் வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில், மீன் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்வதற்காக, வாகனங்கள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, மீன் விற்பனை அங்காடி அமைத்தல், கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு, புதிய மீன்குஞ்சு வளர்க்க குளங்கள் அமைப்பது, புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.சிறிய அளவிலான நன்னீர் பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு, கூண்டுகளில் கடல் மீன் வளர்ப்பு, பயோபிளாக் குளங்களில் இறால் வளர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கும், மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியம் வழங்கப்படுகிறது.செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் அரசு மீன் பண்ணையில், கட்லா, ரோகு, மிருகால், சாதா கெண்டை ஆகிய மீன் குஞ்சுகள் வளர்த்தெடுக்கப்பட்டு, மீன் வளர்ப்போருக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளன.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், சென்னை நீலாங்கரை மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக மொபைல் எண்: 63858 17838 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago