உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு : தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய குழந்தைகளுக்கு, மாநில அரசு விருது வழங்கி வருகிறது.அதற்கு விண்ணப்பிப்பது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும், 13 - 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், மாநில அரசு விருது வழங்கி வருகிறது.இந்த விருதுடன், 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண் குழந்தைகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் போன்ற தனித்துவமான சாதனை செய்திருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு, ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை, பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற அம்சங்களில், வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பெண் குழந்தைகள், தமிழக அரசின், https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில், வரும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இணையதளத்தில் பதிவு செய்தபின், அனைத்து ஆவணங்களையும் கையேடாக மூன்று நகல்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில், வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை