மேலும் செய்திகள்
தடுப்பு இன்றி திறந்தவெளி கிணறு
09-Sep-2024
பொதுமக்களை அச்சுறுத்திய கிணறு மூடல்
26-Aug-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு, பழவேலி, மாமண்டூர் நீரேற்றும் நிலையங்களில், ஜெனரேட்டர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை, 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, நகரசபை ஒப்புதல் வழங்கியது.இதைத்தொடர்ந்து, பழவேலி, மாமண்டூர் ஆகிய நீரேற்றும் நிலையங்களில், மின் தடை காலங்களில் ஜெனரேட்டர் பயன்படுத்தி, மின் மோட்டர்கள் மற்றும் குளோரினேசன் இயந்திரங்கள் இயக்க, தலா 23.10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ரோடியோமலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மாமண்டூர் தலைமை நீரேற்றும் நிலையத்தில், உறிஞ்சு கிணறுகளில் உள்ள பைப் லைன்கள், கேபிள்கள், வால்வுகள் ஆகியவற்றை சீரமைக்க, 24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.செங்கையில், 1 - 33 வார்டுகளில், குடிநீர் பகிர்மான குழாய், பிரதான குழாய்கள், வால்வுகள் பராமரிக்கவும், ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறுகளில் உள்ள மின்விசை பம்புகள் மற்றும் சிறுமின் விசை பம்புகள் பழுதுகளை பராமரிக்கவும், 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தட்டான்மலை, பாசித் தெருவில் உள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு இயக்கப்படும் மோட்டார் பழுதை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய, 2.10 கோடி ரூபாய் ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டது. இப்பணிகளை, தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்துள்ளனர்.இது குறித்து, நகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது:நகராட்சில், குடிநீர் பணிகளில், ஜெனரேட்டர், குழாய்கள் சீரமைப்பு, திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறுகளில் பைப் லைன் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள டெண்டர் அளிக்கப்பட்டு உள்ளது.பணிகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் முடித்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
09-Sep-2024
26-Aug-2024