மேலும் செய்திகள்
ரூ.5 கோடி மதிப்பு நிலம் கூடுவாஞ்சேரியில் மீட்பு
09-Oct-2025
மதுராந்தகத்தில் கலெக்டர் ஆய்வு
09-Oct-2025
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நிறைவு
09-Oct-2025
குடிசை வீடு இரவில் எரிந்து நாசம்
09-Oct-2025
மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில் ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்கு, செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில், 82சி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு கிராமங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், இருபுறமும் பேருந்து நிழற்குடை இல்லாததால், பயணியர் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும் நிலை உள்ளது.இது குறித்து, அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:இந்த பேருந்து நிறுத்தத்தை, ஆப்பூர், வளையக்கரணை, தாசரிகுன்னத்துார் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை, பத்து ஆண்டுகளுக்கு முன், ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இந்த தடத்தில் இருந்த பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன.இதுவரை, மீண்டும் நிழற்குடை அமைக்கப்படாததால், பெண்கள், பள்ளி மாணவ -- மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இந்த பகுதியில் நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து ஆப்பூர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:ஆப்பூர் ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைக்க, செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
09-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025