உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கன்டெய்னர் லாரி மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி

கன்டெய்னர் லாரி மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி

எண்ணுார்:எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் முகமது அப்சல், 50; ஆட்டோ ஓட்டுனர். நேற்று மாலை, லிப்ட் கேட் சந்திப்பில், பாரத் நகரில் இருந்து, சுனாமி குடியிருப்பு நோக்கி, தன் 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் கடக்க முயன்றார்.அப்போது, அந்த சந்திப் பில் இருந்து, எர்ணாவூர்மேம்பாலத்தில் ஏற முயன்ற கன்டெய்னர் லாரி யில் மோதியது. இதில் முகமது அப்சல், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து, உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.கன்டெய்னர் லாரி ஓட்டுனரான, திருச்செந்துாரைச் சேர்ந்த கண்ணன், 49, என்பவரை பிடித்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ