மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
5 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
9 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
9 hour(s) ago
கூடுவாஞ்சேரி:போஸ் சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, வண்டலுாரில் உள்ள கிரசன்ட் சட்டப் பள்ளி வளாகத்தில் நடந்தது.அதில், பெண் ஊழியர்கள் மற்றும் மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பு - போஸ் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் - போக்சோ ஆகிய சட்ட விதிகள் பற்றி விளக்கப்பட்டது.இதில்,பேராசிரியர்கள் லதா, சொக்கலிங்கம், விஜயலட்சுமி, சம்சுல் சமீரா, தமிழ்செல்வி, பானுப்ரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய, நடிகையும் சமூக ஆர்வலருமான ஷர்மிளா, ஊடகங்களின் பங்கு பற்றியும், பாலினம் மற்றும் பாலுணர்வு பற்றிய ஊடக பிரதிநிதித்துவங்கள், பாலியல் துன்புறுத்தல் மீதான அணுகுமுறைகள் பற்றியும் விளக்கினார்.தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் துணை போலீஸ் சூப்பிரண்டன்ட் மேகலா, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ புகார்கள் குறித்து விவரித்தார்.மேலும், தேசிய பணியாளர் மேலாண்மை - கர்நாடகா பிரிவு உறுப்பினர் சபிதா, சமூக நல மேம்பாட்டு நிர்வாகி பூங்கொடி, உச்ச நீதிமன்ற வக்கீல் விஜயதாரணி ஆகியோர் பங்கேற்று பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க தேவையான அறிவுரைகளை வழங்கினர்.
5 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago