உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தி.மு.க., மாஜி நிர்வாகிகள் வீடு மீது பாட்டில் தாக்குதல்

தி.மு.க., மாஜி நிர்வாகிகள் வீடு மீது பாட்டில் தாக்குதல்

அடையாறு: அடையாறு பகுதியைச் சேர்ந்த, 173வது வார்டு தி.மு.க., வட்டச் செயலர் தனசேகர், 40. துணை வட்ட செயலர் துரைராஜ், 42. இருவரும், இரு கோஷ்டிகளாக செயல்பட்டுவந்தனர். தேர்தல் பணி யார் தலைமையில் நடக்க வேண்டும் என்பதில்,இவர்களுக்குள் போட்டி நிலவியது. துரைராஜ் ஆதரவாளர்களும், முன்னாள் வட்ட பிரதிநிதிகளுமான சிங்காரவேலன், 50, செல்வராஜ், 52, இருவரும், அடையாறு கெனால் பேங்க் சாலையில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, இவ்விருவர் வீடுகளிலும், பீர் பாட்டில்கள் வீசி தாக்குதல் நடந்துள்ளது. போலீசார் விசாரணையில், தனசேகரன் ஆதரவாளர்களான, தி.மு.க.,வைச் சேர்ந்த மவுலி, 28,ஹரிஹரன், 30, ஆகியோர் இந்த சம்பவத்தில்ஈடுபட்டது தெரிந்தது.மவுலியை பிடித்து விசாரித்த போது, அவர் 'தி.மு.க., நிர்வாகி'எனக் கூறி, போலீசார்பிடியிலிருந்து தப்பிச்சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை