உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

திருப்போரூர்,:கேளம்பாக்கம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சி, செங்கண்மால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆந்திராவைச் சேர்ந்த சந்திரசேகர், 34. சென்னை போரூர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார்.இவர், கடந்த 29ம் தேதி இருசக்கர வாகனத்தில் செங்கண்மால் பகுதியில் ஓ.எம்.ஆர்., சாலையை கடந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சந்திரசேகர் மீது மோதி பலத்த காயமடைத்தார்.பின், கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து, சந்திரசேகரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த சந்திரசேகர் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை