மேலும் செய்திகள்
வாலிபால் அரையிறுதிக்கு சென்னை அணிகள் தகுதி
18-Feb-2025
சென்னை, அகில இந்திய அளவில், மத்திய வருவாய்துறையினருக்கான வாலிபால் போட்டியில், சென்னை வருமான வரி அணி, சாம்பியன் கோப்பையை வென்றது.அகில இந்திய அளவிலான மத்திய வருவாய் துறையினருக்கான விளையாட்டு போட்டிகள், பெங்களூரில் கடந்த இரண்டு நாட்கள் நடத்தன. வாலிபால் போட்டியில், மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் வெற்றி பெற்ற தலா ஒரு அணி பங்கேற்றன.அனைத்து, 'நாக் - அவுட்' போட்டிகள் முடிவில், தென் மண்டல சென்னை வருமானவரி அணி மற்றும் வடக்கு மண்டல டில்லி ஜி.எஸ்.டி., கஸ்டம்ஸ் அணிகள் தகுதி பெற்றன.விறுவிறுப்பான ஆட்டத்தில், முதல் செட்டை 29 - 27 என்ற கணக்கில், டில்லி ஜி.எஸ்.டி., கஸ்டம்ஸ் அணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை வருமான வரி அணி, அடுத்தடுத்த செட்களில், 25 - 22, 25 - 17, 30 - 28 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து, சாம்பியன் கோப்பையை வென்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, வருமான வரித்துறையின் முதன்மை கமிஷனர் சுதாகரன் ராவ் பரிசுகளை வழங்கினார்.
18-Feb-2025