செங்கல்பட்டு நிகழ்வுகளில் முதல்வர் இரு நாட்கள் பங்கேற்பு
மாமல்லபுரம், திருப்போரூர் அடுத்த, குன்னப்பட்டு பகுதியில் ஜப்பான் சிட்டி எனப்படும் 'ஒன் ஹப்' தொழில் வளாகம் அமைந்துள்ளது. இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோத்ரெஜ் நிறுவன ஆலையை, இன்று காலை 11:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.அதைத்தொடர்ந்து, மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியில் உள்ள லீலா விடுதியில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்கிறார்.நாளை காலை 9:00 மணிக்கு, திருக்கழுக்குன்றம் அடுத்த, கொத்திமங்கலம் சந்திப்பு துவங்கி, பேரூராட்சி அலுவலக பகுதி வரை, நடைபயணம் சென்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுகிறார். பின் செங்கல்பட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, அரசு புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குகிறார். இதையடுத்து, போலீஸ் எஸ்.பி., சாய் பிரணீத் மேற்பார்வையில் முதல்வர் பயண வழித்தடங்கள், நிகழ்விடங்களில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.