உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எழுத்து பிழையுடன் பெயர் பலகையால் குழப்பம்

எழுத்து பிழையுடன் பெயர் பலகையால் குழப்பம்

மறைமலை நகர், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.இந்த சாலையில், கூடுவாஞ்சேரி -- மகேந்திரா சிட்டி வரை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.தற்போது பணிகள் நிறைவடைந்து, வாகன ஓட்டிகள் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்ற போது, சாலை சந்திப்பு மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கிராமங்களை அடையாளம் காணும் வகையில், கிராமங்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிப்பிடும் வகையில், சாலையோரம் பெயர் பலகை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட இரண்டு மொழிகளில் வைக்கப்பட்டுள்ளன.இதில், பரனுார் மற்றும் செட்டிபுண்ணியம் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில், பரனுார் என்பதற்கு பதிலாக பரணுார் எனவும், செட்டிபுண்ணியம் என்பதற்கு பதிலாக, செட்டிபுனியம் எனவும் தவறுதலாக எழுதப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து இங்கு வரும் நபர்கள், குழப்பமடைகின்றனர். எனவே, பெயர் பலகையில் சரியாக எழுத வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: செட்டிபுண்ணியம் கிராமத்தில் பழமையான யோக ஹயக்ரீவர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுபோன்று தவறுதலாக பெயர்கள் உள்ளதால், வழி தெரியாமல் தடுமாறி வருகின்றனர். மேலும், கிராமத்தின் சிறப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த எழுத்துப் பிழையை திருத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை