மேலும் செய்திகள்
திருவடிசூலம் சாலையை சீரமைக்க கோரிக்கை
9 hour(s) ago
குட்டையில் விழுந்த போதை வாலிபர் மீட்பு
9 hour(s) ago
கான்கிரீட் சாலை பணி விறுவிறு
9 hour(s) ago
செங்கல்பட்டு:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக, கூடுவாஞ்சேரி -- மகேந்திரா சிட்டி வரை, சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.இந்த சாலையில், சிங்கபெருமாள் கோவில் பகுதி யில், மெல்ரோசாபுரம்சந்திப்பு -- மகேந்திரா சிட்டி வரை சாலை அமைக்கும் பணிகள், கடந்த ஆண்டு நிறைவடைந்தன.இருப்பினும், தனியாக சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால், அதிக அளவில் எதிர் எதிர் திசையில் வாகனங்கள் செல்கின்றன. அதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இது குறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, 200க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன. அவற்றுக்கு வருவோர், தங்களின் வாகனங்களை முக்கிய சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.இதனால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில்சிக்குகின்றனர். இந்த விபத்துகளை தடுக்க, தனியாக சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் நீண்ட நாட்களாககோரிக்கை விடுத்துவருகிறோம்.எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சர்வீஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.போக்குவரத்து போலீசார் கூறியதாவது:சிங்கபெருமாள்கோவிலில் சர்வீஸ் சாலை இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல மணி நேரம் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.போக்குவரத்து போலீசார் பல மணி நேரம் நின்று, போக்குவரத்தை சீரமைக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. சர்வீஸ் சாலை தனியாக இருந்தால், உள்ளூர் மக்கள் இந்த சாலையை பயன்படுத்துவர்.இதனால், விபத்துமற்றும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள்கூறினர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago