உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரும்புலிச்சேரி பாலாற்று பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்

இரும்புலிச்சேரி பாலாற்று பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்

நெரும்பூர்,:திருக்கழுக்குன்றம் அருகில், பாலாறு இரண்டாக பிரிந்து, இரும்புலிச்சேரி ஊராட்சிப் பகுதி, ஆறுகளுக்கு இடையில் தீவாக உள்ளது.இப்பகுதிவாசிகள், பிற பகுதிகளுக்கு ஆற்றை கடந்து செல்ல, 30 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது. நாளடைவில் தரைப்பாலம் பலமிழந்த நிலையில், கடந்த 2015 வெள்ளப்பெருக்கில் இடிந்து, ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது.நெடுஞ்சாலை திட்டங்கள் கோட்டம், உயர்மட்ட பாலம் கட்ட முடிவெடுத்து, அரசிடம் பரிந்துரைத்தது. அரசும் ஒப்புதல் அளித்து, 51.87 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்டுமானப்பணிகளை துவக்க, கடந்த பிப்ரவரியில் பூமிபூஜை நடத்திய நிலையில், ஒப்பந்த நிறுவனம் சார்பில் பழைய பாலம் இயந்திரம் வாயிலாக இடிக்கப்பட்டது.அதோடு, கட்டுமானப்பணிக்கான கனரகவாகனங்கள் கடந்து செல்ல, தற்காலிக தடமும் ஏற்படுத்தப்பட்டது.தற்போது, கட்டுமானப் பணிகளை துவக்க, கான்கிரீட் கலவை தயாரிக்கும் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது.இன்னும் ஒரு வாரத்தில், கான்கிரீட் துாண்கள் அமைக்கும் பணி துவக்கப்படவுள்ளதாக, ஒப்பந்தநிறுவனத்தினர்தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ