உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கன்ட்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

கன்ட்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

திருப்போரூர், ஓ.எம்.ஆர்., சாலையில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து திருப்போரூரை நோக்கி கன்டெய்னர் சென்றது. மகேஷ் என்பவர் ஓட்டிச்சென்றார்.அப்போது வெங்கலேரி ஆறுவழிச்சாலை இணைப்பு ரவுண்டானா அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது.இதில் லாரி ஓட்டுநர் மகேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியின் முன் கண்ணாடி பக்கவாட்டு பகுதி சேதமடைந்தது. திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ