மேலும் செய்திகள்
நடைபாதை கடையை அகற்ற கோரி வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
10 hour(s) ago
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
10 hour(s) ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
10 hour(s) ago
கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சி, வாலாஜாபாத் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில், அதிக அளவில் மாடுகள் உலா வருகின்றன.குறிப்பாக, ஓட்டேரி காவல் நிலையம் அருகில், மண்ணிவாக்கம் அரசு பள்ளி எதிரில் என, சாலையின் இருபுறமும் மாடுகள் உலா வருவதுடன், சாலையில் நிரந்தரமாக தங்கியும் உள்ளன. இதனால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்கின்றனர்.மண்ணிவாக்கம் - வாலாஜாபாத் சாலையில், வண்டலுாரில் இருந்து படப்பை, வாலாஜாபாத், காஞ்சிபுரம் நோக்கி, செல்லும் வாகனங்களும், காஞ்சிபுரம், வாலாஜாபாத், படப்பையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்களும் சென்று வருகின்றன.தொடர்ந்து, பல நாட்களாக சாலையில் மாடுகள் நிரந்தரமாக படுத்திருப்பதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.எனவே, சாலையை ஆக்கிரமித்துள்ள மாடுகளை அப்புறப்படுத்தி, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago