உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண்களுக்கான சைக்கிள் போட்டி

பெண்களுக்கான சைக்கிள் போட்டி

திருப்போரூர் : திருப்போரூர் ஆறுவழிச்சாலையில், 'கேலோ இந்தியா' அமைப்பின் சார்பில், பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள் நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியை, இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை இயக்குனர் ஸ்வேதா விஸ்வநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, அந்தமான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களிலிருந்து 120 பெண்கள் பங்கேற்றனர். இதில், 14 வயதுக்கு உட்பட்டோர், 14 - 16 வயது வரை உள்ளவர்கள், 16 - 18 வயது வரை உள்ளவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உள்ளூர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ