உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.2 கோடியில் 3 பூங்காக்கள் சீரமைக்க முடிவு

ரூ.2 கோடியில் 3 பூங்காக்கள் சீரமைக்க முடிவு

தாம்பரம்,: தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், பல்லாவரத்தில் 22 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு, ஏற்கனவே மக்கள் பயன்பாட்டில் உள்ளன.இந்த நிலையில், சுபம் நகர், பல்லவா கார்டன், நியூ காலனி 6வது குறுக்கு தெரு ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு பூங்காவை, சி.எம்.டி.ஏ., நிதி 2 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.அந்த பூங்காக்களில், சுற்றுச்சுவர் அமைத்தல், நடைபாதை மேம்படுத்துதல், மின் கம்பங்களுடன் கூடிய விளக்குகள் அமைத்தல், இருக்கை வசதி ஏற்படுத்துதல், குடிநீர் வசதி, பசுமை புல்வெளி பரப்பு ஆகிய வசதிகள் அமைக்கப்பட உள்ளன என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை