ஊரக வளர்ச்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதியம் வழங்கக்கோரி, கலெக்டரிடம், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர், மனு அளித்தனர்.இதுகுறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள், கலெக்டர் அருண்ராஜிடம் அளித்த மனு வருமாறு:செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு, ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், ஊழியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். வங்கி கடன், வீட்டு வாடகை, குடும்ப செவினங்கள் மேற்கொள்ள முடியாமல், கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.ஊழியர்களின் நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தை, மாதத்தின் முதல் நாளில், அனைவருக்கும் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக, ஊரக வளர்ச்சி முகமை ஊழியர்களிடம், கலெக்டர் அருண்ராஜ் உறுதியளித்தார்.