உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எச்சரிக்கை பலகையின்றி நடக்கும் வடிகால்வாய் பணியால் இடையூறு

எச்சரிக்கை பலகையின்றி நடக்கும் வடிகால்வாய் பணியால் இடையூறு

திருப்போரூர்:திருப்போரூரில் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம், பெட்ரோல் பங்க், கந்தசுவாமி கோவில், சார் - பதிவாளர் அலுவலகம், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், வங்கிகள், திருமண மண்டபங்கள், பல வணிக கடைகள் உள்ளன.இதனால், திருப்போரூரில் இப்பகுதி எந்நேரமும் பரபரப்பாகவும், மக்கள் நடமாட்டத்துடன், வாகன போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படும்.மேலும், ஓ.எம்.ஆர்., சாலை வழியாக, மற்ற பகுதிகளுக்கு செல்லும் வாகன போக்குவரத்தும் அதிகமாக காணப்படும்.இந்நிலையில், திருப்போரூர் பெட்ரோல் பங்க் எதிரே ஓ.எம்.ஆர். சாலையில், தெற்கு மாடவீதி இணையும் பகுதியில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளுக்காக, சாலையில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக, 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இயந்திரத்தில் அள்ளப்படும் மண், சாலையில் லாரியை நிறுத்தி கொண்டு செல்லப்படுகிறது.ஆனால், இந்தப் பள்ளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகைகள் ஏதும் வைக்காமலும், சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமலும், இப்பணிகள் நடப்பதாக அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.மேலும், ஏராளமான வாகனங்கள் செல்லும் இச்சாலையில், இப்பணிகளை இரவு நேரத்தில் செய்வதே இடையூறை தவிர்க்கும் வழி என, இப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி