உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் தொட்டி உடைப்பு அதிகாரிகள் மெத்தனம்

குடிநீர் தொட்டி உடைப்பு அதிகாரிகள் மெத்தனம்

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், காந்தி பூங்காவில், கிளை நுாலகம் இயங்கி வருகிறது. 50,000 புத்தகங்கள் உடைய இந்த நுாலகத்திற்கு தினமும் 150க்கும் மேற்பட்ட வாசகர்கள், மாணவர்கள் வருகின்றனர்.இந்த கட்டடத்தின் மேற்பகுதியில், மாநகராட்சி சார்பில், பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.இத்தொட்டி உடைந்து விட்டதால், அதில் தண்ணீரை நிரப்ப முடியாமல் தனியாரிடம் கேன் குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக, நுாலக ஊழியர்கள், வாசகர்கள் தங்கள் பணத்தை செலவிடும் சூழல் உள்ளது.தவிர, மழை பெய்தால், இந்த கட்டடத்தில் கசிவு ஏற்பட்டு, வளாகத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால், புத்தகங்கள் பாழாகின்றன.நுாலக பராமரிப்பில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, வாசகர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ