உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெற்குப்பட்டு இ.சி.ஆரில் முதியவர் உடல் மீட்பு

தெற்குப்பட்டு இ.சி.ஆரில் முதியவர் உடல் மீட்பு

மாமல்லபுரம்,:கோவளம் அடுத்த கானத்துார் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 52. ஆட்டோ ஓட்டுனர். இவர், தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி, தினசரி மது அருந்தியதால், அவருக்கும், மனைவி விஜயலட்சுமிக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.விஜயலட்சுமி கண்டித்ததால், இரண்டு மாதங்களுக்கு முன், வீட்டிலிருந்து வெளியேறிய ஜெயகுமார், மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை 10:45 மணிக்கு, மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு பேருந்து நிறுத்தம் பகுதியில், ஜெயகுமார் இறந்து கிடந்தார்.இதுபற்றி அறிந்த விஜயலட்சுமி, மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜெயகுமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ