உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பட்டாசு மருந்தில் வெடி பழைய குற்றவாளி கைது

பட்டாசு மருந்தில் வெடி பழைய குற்றவாளி கைது

தாம்பரம்:மேற்கு தாம்பரம், கடப்பேரி அற்புதம் நகரைச் சேர்ந்தவர் கோல்டு மணி என்கிற மணிகண்டன், 26; பழைய குற்றவாளி. நேற்று முன்தினம் மாலை அற்புதம் நகர் குளக்கரை தெருவில், பழைய வீட்டின் மாடியில் மணிகண்டனும், அவரது நண்பரான பிரவீன், 23, என்பவரும் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது, நாட்டு பட்டாசு மருந்துகளை ஒன்றாக சேர்த்து, ஒரு துணியில் கட்டியுள்ளனர். பின், அந்த துணி மீது பேப்பர், கற்களை வைத்து இறுக்கமாக சுற்றி, சுவரில் அடித்து வெடிக்கச் செய்துள்ளனர்.அந்த குண்டு தவறி, அருகேயுள்ள முருகன் என்பவரின் வீடு மீது விழுந்து வெடித்தது. இதில், வீட்டின் ஓடு சேதமடைந்தது.இச்சம்பவம் தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை நேற்று கைது செய்தனர். தலைமறைவான பிரவீனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி