மேலும் செய்திகள்
மாமல்லை செயல் அலுவலர் பொறுப்பேற்பதில் தாமதம்
17-Aug-2024
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இந்த பேரூராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, செயல் அலுவலர் இன்றி செயல்பட்டு வருகிறது.தற்காலிகமாக, கருங்குழி பேரூராட்சியில் பணியாற்றும் செயல் அலுவலர் அருள்குமார், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பொறுப்பு செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.பணி நாட்களில் மூன்று நாட்கள், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு வந்து செல்கிறார். இதனால், அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.எனவே, அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு, செயல் அலுவலர் நியமிக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17-Aug-2024