மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
6 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
6 hour(s) ago
சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த மேல்வசலை கிராமத்தில், நீர்பெயர் - வேட்டூர் செல்லும் 8 கி.மீ., மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.மேல்வசலை கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில், அபாயகரமான சாலை வளைவு உள்ளது. இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன.இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சாலை வளைவு பகுதியை கடந்து செல்கின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை வளைவு பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 hour(s) ago
6 hour(s) ago