உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படகு கவிழ்ந்து மீனவர் காயம்

படகு கவிழ்ந்து மீனவர் காயம்

மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார், 43. நேற்று முன்தினம், படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து, காலை 8:30 மணிக்கு, கரைக்கு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது படகு கவிழ்ந்து, மோட்டார் விசிறியில் சிக்கி, மூக்கு, தாடை ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சசிகுமாருடன் சென்றவர்கள் அவரை மீட்டு, பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை