உணவு பொருள் விற்பனை விழிப்புணர்வு
மாமல்லபுரம்,உணவு பொருட்கள் விற்பனைக்கு, முறையான உரிமம் பெறுவது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து, மாமல்லபுரம் வியாபாரிகளிடம், உணவு பாதுகாப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாமல்லபுரத்தில், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளிடம், திருக்கழுக்குன்றம் வட்டார உணவு, பாதுகாப்பு அலுவலர் பிரசாத் தலைமையில், விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில், அனைத்து வகை உணவுப் பொருட்கள், தேநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவை விற்கும் கடைகளுக்கு, உணவு பாதுகாப்பு துறையிடம் விண்ணப்பித்து, முறையான உரிமம் பெற வேண்டும்.இதற்கு முன் உரிமம் பெற்று, அதன் அனுமதி காலம் காலாவதியாகி இருந்தால், அதை புதுப்பிக்க வேண்டும்.காலாவதி பொருட்கள், குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு 'சீல்' வைத்து, உரிமையாளர் கைது செய்யப்படுவார் என, அறிவுறுத்தப்பட்டது.